வாகன நெரிசலால் தினமும் ஒரு பில்லியன் ரூபா நட்டம் | தினகரன்


வாகன நெரிசலால் தினமும் ஒரு பில்லியன் ரூபா நட்டம்

கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசல்களால் பல்வேறு விதத்திலும் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.  

வாகன நெரிசல், சூழல் மாசடைதல், கால விரயம் போன்றவைகளினால் இந்த நட்டம் ஏற்படுவதாக துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிணங்க ஒரு வருடத்திற்கு 397பில்லியன் நட்டமாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலைக்கான நிர்மாணப்பணிகள் நேற்று பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:  எமது அரசாங்கம் கொழும்பு நகரில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. 1990 காலகட்டங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை வழங்கிய கொழும்பு சுற்றுவட்டப்பாதை, தெற்கு அதிவேக பாதை மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட வீதிகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு வழங்கியுள்ளார்.  

லோரன்ஸ் செல்வநாயகம்  


லோரன்ஸ் செல்வநாயகம்  

Add new comment

Or log in with...