கிழக்கில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும் | தினகரன்


கிழக்கில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும்

கிழக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை  நிவர்த்திக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார். 

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10) இடம்பெற்ற போதே இதனைக் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் எச்.என். டி மட்டுமல்லாது பட்டதாரிகள், அதேபோல் உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்தார். 

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன், கல்வியில் பாரிய முன்னேற்றம் அடைவதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

(ரொட்டவெவ குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...