கோதுமை மாவை பழைய விலைக்கே விற்க வர்த்தகர்கள் இணக்கம் | தினகரன்


கோதுமை மாவை பழைய விலைக்கே விற்க வர்த்தகர்கள் இணக்கம்

கோதுமை மாவை பழைய விலைக்கே விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாயத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.  

இதற்கிணங்க கோதுமை மாவை இறக்குமதி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பழைய விலைக்கு அதனை விற்பனை செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்திலேயே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.   அதற்கிணங்க நேற்றுமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா பழைய விலைக்கு விற்பனை செய்யப்படும் என்றும் நிறுவனங்கள் அதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...