அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் | தினகரன்


அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார்.

 


Add new comment

Or log in with...