காஷ்மீரில் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த இந்தியா வேண்டுகோள் | தினகரன்


காஷ்மீரில் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த இந்தியா வேண்டுகோள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ,-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி கடந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். பேச்சுவார்த்தையின் போது, சீனா தனது பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

ஆகஸ்ட் 5 ம் திகதி ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா சிறப்பு அந்தஸ்தை வழங்கிய பின்னர் சீனாவுக்கு- பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்த பயணம் இருந்தது. சீனா, -பாகிஸ்தான் கூட்டு அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் பற்றிய குறிப்பை இந்தியா செவ்வாய்க்கிழமை நிராகரித்ததுடன், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் சீனா-, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:- சீன வெளியுறவு மந்திரி அண்மையில் விஜயம் செய்த பின்னர் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இடம்பெற்று உள்ள ஜம்மு-காஷ்மீர் பற்றிய குறிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்.


Add new comment

Or log in with...