பாலித தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல் | தினகரன்

பாலித தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்துகம, நேபட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியின்றி, குறித்த சடலத்தை அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தமை தொடர்பில் அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 5 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

இதன் போது சந்தேகநபர்கள் ஐவரையும் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...