சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயன்றவர் கைது | தினகரன்

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் ஒருவர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாதகல் பகுதியில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கடல் வழியாக இவர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டதாகவும், தெரியவந்துள்ளது.

இச்சந்தேகநபரிடமிருந்து 3,650 ரூபா பெறுமதியான இந்திய நாணயத்தாள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள இந்திய நாணயத்தாள் மற்றும் கையடக்கத் தொலைபேசியுடன், சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 


Add new comment

Or log in with...