இந்திய மீனவர்கள் நால்வர் கைது | தினகரன்

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல் பிரதேசத்திலிருந்து வடமேல் திசையில் கோவிலம் கலங்கரை விளக்கத்தை அண்டிய கடற்பகுதியில் கடற்டையினர் நேற்று (09) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரோலர் படகுடன் குறித்த இந்திய மீனவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...