தல்கஸ்வலை அன்னை தெரெசா ஆலய திருவிழா | தினகரன்


தல்கஸ்வலை அன்னை தெரெசா ஆலய திருவிழா

தல்கஸ்வலை புனிதஅன்னை தெரெசா ஆலய திருவிழா எதிர்வரும் 15ம் திகதி காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு  ரேமன்ட் விக்ரமசிங்க ஆண்டகையின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் 08ம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் தினமும் நவநாள் வழிபாடுகள் இடம்பெற்று சனிக்கிழமை மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து திருவிழா கூட்டுத் திருப்பலி 15ம் திகதி காலை காலி மறைமாவட்ட ஆயர் மேதகு ரேமன்ட் விக்ரமசிங்க ஆண்டகையின் தலைமையில் நிறைவேற்றப்படவுள்ளது.  

இலங்கையில்  புனித   புனித அன்னை தெரெசாவுக்கான முதல்  ஆலயம் காலிமறைமாவட்டத்தில் உள்ள தல்கஸ்வலை என்னும் தேயிலைத்தோட்டத்தில் அமைந்துள்ளது. 2012ம் ஆண்டுஅர்ச்சிக்கப்பட்ட இவ்வாலயத்தில் பல புதுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனால் இந்த ஆலயம் பிரபலமடைந்து வருவதுடன் வருடாவருடம் அன்னையின் விசுவாசிகளால் திருவிழா வெகு சிறப்பாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலயத்தின் முன்னேற்றம் மற்றும் மக்களை விசுவாசத்தில் வழிநடத்தும் அளப்பரிய பணிகளை பங்குத்தந்தை அருண் ரெக்ஸ்அடிகளார் அர்ப்பணிப்புடன மேற்கொண்டு வருகிறார்.

இம் முறை ஆலய திருவிழாவில் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் பங்பேற்பதுடன் பங்கு மட்டத்தில் போக்குவரத்து  வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டப்பட்டு சிலஆண்டுகளிலேயே பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் தேடிவந்து செபிக்கும் அளவுக்கு இவ்வாலயம் வளர்ந்துள்ளது. இவ்வாலயம் இங்குஅமைந்ததை அன்னையின் முதல் புதுமையாக இவ்வூர்மக்கள் பார்க்கின்றனர். 

தல்கஸ்வலை அன்னை தெரெசாவின் பரிந்துரையால் பல புதமைகள் இடம்பெற்று நடந்த புதுமைகளுக்கு மக்கள் சாட்சிகளாக இருக்கின்றனர்.

எல்.ஜொனா   

                              


Add new comment

Or log in with...