தொழிற்சங்கங்கள் சில வரம்பு மீறி செயற்பாடு | தினகரன்


தொழிற்சங்கங்கள் சில வரம்பு மீறி செயற்பாடு

தொழிற்சங்கங்களை ஒடுக்காமலும் அவற்றுடன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாமலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் சில தொழிற்சங்கங்கள் தமது வரம்பை மீறி செயற்படுவதாக என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

‘அரச தாதியர் சங்கத்தினரின் விளையாட்டை மேம்படுத்தும் வருடாந்த விளையாட்டு நிகழ்வு – 2019’ நுவரெலியாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

தொழிற்சங்களில் 15வருடங்களுக்கு அதிகமாக நான் கடமையாற்றியுள்ளேன். உலகளாவிய ரீதியில் உள்ள தொழிற்சங்கங்கள் இன்று போராட்டங்களுக்கு அப்பால் பேச்சுவார்த்தைகள் மூலமாக தமது கோரிக்கைகளை வெற்றிக்கொள்ள முற்படுகின்றன.  

கடந்த காலங்களை போன்று தொழிற்சங்கங்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்காது நேரடியாக அவற்றுடன் அமர்ந்து சுமுகமான பேச்சுகளை நடத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாம் தொழிற்சங்கங்களுடன் சுமுகமான பேச்சுகளையே நடத்துகின்றோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் போன்று மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கவில்லை.

என்றாலும், சில தொழிற்சங்கங்கள் வரம்பைமீறி அரசாங்கத்திற்கு எதிராக நடந்துக்கொள்கின்றன. சில தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றன.


Add new comment

Or log in with...