வேட்பாளர் யார் என்பதனை விட தமிழ் வாக்கு குறித்து நாடி பிடிப்பதிலே குறியாக உள்ளனர் | தினகரன்


வேட்பாளர் யார் என்பதனை விட தமிழ் வாக்கு குறித்து நாடி பிடிப்பதிலே குறியாக உள்ளனர்

தென்னிலங்கையிலே யார் வேட்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையே நாடி பிடித்துப் பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கூறினார்.  

வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,  நாங்கள் இப்போது சின்னச் சின்ன குழுக்களாக சின்னச் சின்ன சமூகங்களாக வேறுபட்டுப் போய் இருக்கிறோம், அதனை அரசாங்கமோ, பேரினவாதிகளோ திட்டமிட்டுச் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலமாக ஒற்றுமையாக நின்றால் அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.  

எங்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.  மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாம் மாறி மாறி வந்த தேசியக் கட்சிகள் எல்லாம் எங்களது இனத்தின் மீது சவாரி விடுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். எமது பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி வழங்குவதில் அவர்கள் எந்த கரிசனையும் கொண்டிருக்கவில்லை.  

இப்போது தென்னிலங்கையிலே யார் வேட்ப்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். கோத்தபாய கேட்கிறாரா அல்லது சஜித் கோட்கிறாரா ரணில் விக்கிரமசிங்க கேட்கிறாரா என்பதல்ல அவர்களின் பிரச்சினை.  

அவர்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதனைப் பார்கிறார்கள்.   


Add new comment

Or log in with...