இலங்கை சந்தைக்கு அறிமுகமாகும் vivo S1 | தினகரன்


இலங்கை சந்தைக்கு அறிமுகமாகும் vivo S1

vivo புத்தம் புதிய Sவரிசையின் முதல்ஸ்மார்ட் போனான S1ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன்,இது32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Cameraஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.பிராந்தியத்தில் உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்ற வகையில், vivo mobile தனதுS1ஐ மிலேனியல் இளைஞர்கள் மற்றும் அவர்களது ஸ்டைலான, ஆற்றல்மிக்க மற்றும் நவநாகரீகத்துக்கு ஏற்ற வகையில் கவர்ச்சி மற்றும் மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக வகைப்படுத்துகின்றது. 

ஸ்டைலான இளைஞர்களுக்கு ஏற்றவகையில், வீடியோ பார்வையிடும் போது, படங்களை பிடிக்கும்போது அல்லது இணைய பாவனையின் போது முழுமையான பயனர் அனுபவத்தைத் தரும் துள்ளியமான, பிரகாசமான மற்றும் இயற்கையான நிறங்களைக் கொண்ட super AMOLED Halo Full View Displayதிரையையும் இந்த அதி நவீன வடிவமைப்பைக் கொண்ட vivo S1கொண்டுள்ளது. 

“நுகர்வோருக்கு முன்னுரிமையளிக்கும் மூலோபாயத்தை உபயோகிப்பதையொட்டி vivo mobileபெருமையடைகின்றது. எமது நுகர்வோரில் வளர்ந்து வரும் பிரிவு இளம் பயனர்கள் என்பதனால் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த பாய்ச்சலொன்று அவசியமென நாம் நம்புகின்றோம்.

இதனையே S வரிசை ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் அடைய எதிர்ப்பார்க்கின்றோம். முதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்டைலிஷ் ஸ்மார்ட் போன்கள் மீது ஆர்வம் கொண்ட நுகர்வோரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் எமது முயற்சிகளை இது எதிரொலிக்கின்றது. vivo S1 ப்ரீமியம் தோற்றம் கொண்டதுடன், முதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான செயற்பாட்டைக் கொண்டதென,”என பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.   


Add new comment

Or log in with...