தேசிய தர விருதுகளில் மலிபன் பிஸ்கட் கௌரவம் | தினகரன்


தேசிய தர விருதுகளில் மலிபன் பிஸ்கட் கௌரவம்

‘Global Performance Excellence Awards’ விருது வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் ‘World-Class’ விருதை வென்று, பிஸ்கட் தயாரிப்புத் தொழிற்துறையில் முன்னணியில் இருந்து வரும் மலிபன் பிஸ்கட்ஸ் மனுபக்சரிஸ் பிரைவட் லிமிட்டெட், அண்மையில் இலங்கை தர நிர்ணயங்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய தர விருது வைபவத்தில் கௌரவிக்கப்பட்டது. 

ஆசிய பசிபிக் தர அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Global Performance Excellence Awards வைபவத்தில் 2016மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக வேர்ள்ட் கிளாஸ் விருதைப் பெற்ற இலங்கையின் ஒரேயொரு நிறுவனம் மலிபன் ஆகும். மலிபன், 1996, 2010, 2015ஆம் ஆண்டுகளில் முதலாவது உணவு உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற அடிப்படையில் தேசிய தர விருதை மூன்று முறை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டது. 

மலிபன் பிஸ்கட்ஸ் மனுபக்சரிஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் குழும நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவர்தன இந்த கௌரவம் பற்றிக் குறிப்பிடுகையில், 'எமக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவத்தை நாம் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றோம். இத்தகைய கௌரவ விருதை மூன்று முறை பெற்றமை மிகப்பெரிய பாக்கியமாகும். மலிபன் சார்பாக கைத்தொழிலுக்கு நாம் கொண்டு வந்த நன்மதிப்பு, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, கடமை உணர்ச்சி ஆகியவற்றை அங்கீகரித்து எமக்கு வழங்கப்பட்ட விருதுக்காக நான் SLSI நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மலிபனின் நாங்கள் உலக தரம் வாய்ந்த தயாரிப்புக்களையும், சேவைகளையும் எமது பெறுமதி மிக்க வாடிக்கையாளருக்கு எமது வியாபார நடவடிக்கைகளில் தரம் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலம் வழங்குகின்றோம். FMCG உணவுப் பிரிவில் ஆட்டத்தையே மாற்றியமைப்பவர் ஆவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் பெறுபேறாக நாம் வாடிக்கையாளர் வாழ்க்கை முறையின் மாறும் போக்குகளுடன் தொடர்ந்து இணைந்திருக்க எமக்கு வரும் சவால்களை எதிர்கொண்டு எமது விசுவாசம் மிக்க உள்ளுர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கி வருகின்றோம்”என்றார்.   


Add new comment

Or log in with...