பேஸ்புக் முக இனங்காணல் பயன்பாட்டில் மாற்றம் | தினகரன்


பேஸ்புக் முக இனங்காணல் பயன்பாட்டில் மாற்றம்

பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்படும் படங்களுக்கு முக அடையாளத் தொழில்நுட்பத்தை விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பேஸ்புக் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று பயனீட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து விருப்பத்திற்கேற்ப முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உத்தி குறித்து பேஸ்புக் அறிவித்துள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர் முக அடையாளத் தொழில்நுட்பத்தை பேஸ்புக் அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட நபர்களின் படங்களை வேறெவரும் பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டது.

ஆனால், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மக்களைக் கண்காணிப்பதற்கு முக அடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சட்ட அமலாக்கத் துறையிலும், அரசாங்க அமைப்புகளிலும் அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

எனவே, தேவையிருந்தால் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தற்போது, முக அடையாளத் தொழில்நுட்பம் மாற்றப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...