திட்டம் போட்டு திருடுற கூட்டம் | தினகரன்


திட்டம் போட்டு திருடுற கூட்டம்

உலகக்கோப்பையை திருட முயற்சிக்கும் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காமெடியுடன் சொல்லியிருக்கும்படம்திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

கடந்த 1996ஆம் ஆண்டு, இயக்குநர், நடிகர் பார்த்திபன் மற்றும் காமெடி கிங் கவுண்டமணி இணைந்து காமெடியில் கலக்கிய படம் டாட்டா பிர்லா படம். தொடக்கம் முதல் இறுதி வரையிலும் காமெடியில் இருவரும் புகுந்து விளையாடி இருப்பார்கள். தற்போது மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தில் பார்த்திபன் புகுந்து விளையாடி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தில் இடம் பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பிரபலமான பாடலில் இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, எனும் வரிகளை மையமாக வைத்து கொண்டு முழுக்கமுழுக்க ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுதர். ஷார்ட் ஃபிலிம் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பியவர் இப்போது பிரபு வெங்கடாச்சலம், பி.எஸ்.ரகுநாதன் தயாரிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

கயல் புகழ் சந்திரன், பார்த்திபன், சாத்னா டைட்டஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் அஸ்வத் இசையமைத்துள்ளார். ஒரு திருட்டு கும்பல் தலைவனாக நடித்திருக்கிறார் பார்த்திபன். திருட்டு கும்பல் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து மசாலா அம்சங்களும் அடங்கியிருக்கும்.


Add new comment

Or log in with...