புகையிரத கடவையில் தந்தை, மகள் பலி | தினகரன்


புகையிரத கடவையில் தந்தை, மகள் பலி

வைப்பக படம்

வியாங்கொடை, வந்துரவ பகுதியில் உள்ள புகையிரத கடவையில், மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) காலை 6.45மணியளவில் வியாங்கொடை, வந்துரவ ரயில் கடவை வழியாக பயணித்த தந்தையும் (45) அவரது மகளுமே (11) இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த மோட்டார் சைக்கிள், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் ஸ்தலத்திலேயே இருவரும் பலியாகியுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை வியாங்கொடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...