Saturday, April 20, 2024
Home » கொள்கைகளுக்கு வாக்களித்தமையாலே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது

கொள்கைகளுக்கு வாக்களித்தமையாலே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது

அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 6:08 am 0 comment

கொள்கைகளுக்கு வாக்களித்தமையாலே நாடு வங்குரோத்து  நிலைக்கு வந்தது. தற்போதைய ஜனாதிபதி ஒரு கொள்கைக்கு மட்டுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர் எனவும் அந்த அர்ப்பணிப்புகளின் அடிப்படையில் நாட்டிற்கு வெற்றியை பெற்றுத்தர அவர் உழைத்து வருவதாகவும் தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தனக்கு எந்த கொள்கையும் இல்லை எனவும், நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் தீர்வொன்றில் தான் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “இலங்கையை வெற்றி கொள்வோம் “மக்கள்  நடமாடும் சேவை நிகழ்வுத்திட்டத்தின்  அங்குரார்ப்பண  நிகழ்வு நேற்று (31) அநுராதபுரம் சல்காது  விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான தொழில்சார் பயிற்சி வழங்குவது தொடர்பாக  மக்களுக்கு அறிவிக்கும்  வேலைத்திட்டம், தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் நடைபெற்றன. இதன் போது, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு விசேட சேவைகளும் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும்  சேவை அல்ல, மாறாக  நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்தும் தீர்வாக  அறியப்படுகிறது. இது போன்ற இரண்டு நிகழ்வுகளை காலி மற்றும்  யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளோம்.

கொள்கைகளுக்கு வாக்களித்தமையாலே நாடு வங்குரோத்து  நிலைக்கு வந்தது. ஆனால் என்னிடம்  எப்போதும் இருந்த தீர்வு  நாட்டிற்கு வெற்றியைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும்.  தற்போதைய சாதகமான நிலைக்கு ஜனாதிபதி நாட்டைக் கொண்டுவந்து இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கை இல்லாத முடிவுகளைக் கொண்ட தலைவர். கொள்கைகள் மாறுகின்றன. ஆனால் முடிவுகள் வளர்ந்து வருகின்றன. மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்று நான் கூறுகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT