Huawei அறிமுகப்படுத்தியுள்ள Ascend 910, MindSpore | தினகரன்

Huawei அறிமுகப்படுத்தியுள்ள Ascend 910, MindSpore

Huawei அறிமுகப்படுத்தியுள்ள Ascend 910, MindSpore-Huawei launches Ascend 910 Mindspore
Huawei இன் சுழற்சி அடிப்படையிலான பணிப்பாளர் சபைத் தலைவரான எரிக் சூ Ascend 910 AI processor மற்றும் MindSpore செயற்கை நுண்ணறிவு கணினி கட்டமைப்பு அறிமுகம் தொடர்பில் அறிவித்தார்.

உலகில் மிகவும் வலிமைமிக்க AI processor, மற்றும் MindSpore, அனைத்தும் உள்ளடங்கிய செயற்கை நுண்ணறிவு (AI) கணினிக் கட்டமைப்பு

உலகில் மிகவும் வலிமை கொண்ட AI processor ஆன Ascend 910 மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய செயற்கை நுண்ணறிவு கணினிக் கட்டமைப்பான MindSpore ஆகியவற்றை Huawei உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

“கடந்த ஆண்டு ஒக்டோபரில் எமது செயற்கை நுண்ணறிவு மூலோபாயம் தொடர்பில் நாம் அறிவித்த பின்னர் இது வரை சீரான வளர்ச்சி கண்டுள்ளோம்,” என்று Huawei  இன் சுழற்சி அடிப்படையிலான பணிப்பாளர் சபைத் தலைவரான எரிக் சூ குறிப்பிட்டார். “ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, உற்பத்தியின் அறிமுகம் என அனைத்துமே திட்டமிட்டவாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. முழு அடுக்குடன், அனைத்தும் உள்ளடங்கிய செயற்கை நுண்ணறிவுத் துறையை அறிமுகப்படுத்துவோம் என உறுதிமொழி அளித்திருந்தோம். Ascend 910 மற்றும் MindSpore ஆகியவற்றை அறிமுகப்படுத்தி இன்று அதனை நிறைவேற்றியுள்ளோம். Huawei இன் செயற்கை நுண்ணறிவு மூலோபாயத்தில் புதியதொரு கட்டத்தை இது குறித்து நிற்கின்றது,” என்று அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டார்.

Huawei இன் Ascend-Max chipsets உற்பத்தி வரிசையைச் சார்ந்த ஒரு புதிய AI processor ஆக Ascend 910 காணப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் Huawei இன் பிரதான நிகழ்வாக அமைந்த Huawei Connect நிகழ்வில், processor தொடர்பில் திட்டமிடப்பட்டள்ள புதிய வகைப்பாடுகள் தொடர்பில் Huawei அறிவித்திருந்தது. தொடர்ச்சியாக ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்திப் பணிகள் காரணமாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டமை விடவும் மிகவும் குறைந்த அளவிலான வலுவை நுகர்வதுடன், தனது செயற்பாட்டு இலக்குகளை Ascend 910 processor வெளிக்கொண்டுவருவதாக சோதனைப் பெறுபேறுகள் நிரூபித்துள்ளன.

பாதியளவு துல்லியமான தொழிற்பாடுகளை (half-precision floating point - FP16) பொறுத்தவரையில், 256 TeraFLOPS களை Ascend 910 வழங்குகின்றது. முழு அளவு துல்லியமான கணிப்பீடுகளுக்கு (integer precision calculations - INT8) அது 512 TeraOPS களை வழங்குகின்றது. அதன் நிகரற்ற திறனுக்கு மத்தியிலும், Ascend 910 இன் அதிகபட்ச மின்வலு நுகர்வானது 310W மட்டுமே என்பதுடன், திட்டமிடப்பட்டதை விட (350W) மிகவும் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

“Ascend 910 எமது எதிர்பார்ப்பினை விடவும் மிகவும் சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளது,” என சூ குறிப்பிட்டார். “எவ்விதமான ஐயமுமின்றி, உலகில் வேறு எந்தவொரு AI processor இனை விடவும் அதிக கணினி வலுவை இது கொண்டுள்ளது,” என்று மேலும் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு முறைமைப் பயிற்சிக்கு Ascend 910 உபயோகிக்கப்படுகின்றது. ResNet-50 அடிப்படையிலான ஒரு பாரம்பரிய பயிற்சி அமர்வில், Ascend 910 மற்றும் MindSpore ஆகியவற்றின் இணைப்பானது TensorFlow இனை உபயோகிக்கும் ஏனைய பிரதான பயிற்சி அட்டைகளை விடவும் பயிற்சி செயற்கை நுண்ணறிவு முறைமைகளில் இரு தடவைகள் கூடுதல் வேகம் கொண்டது.

எதிர்காலத்தில், இன்னும் பரந்த அளவிலான தேவைகளை (உ-ம். edge computing, on-vehicle computing for autonomous driving, மற்றும் பயிற்சி) ஈடுசெய்யும் வகையில். தாராளமான, கட்டுபடியாகும் மற்றும் இசைவாக்கம் கொண்ட கணினி வலுவை வழங்கும் AI processorள கள் மீது Huawei தொடர்ந்தும் முதலீடு செய்யும். 


Add new comment

Or log in with...