Saturday, April 20, 2024
Home » ஜனாதிபதியின் வீடு எரிப்பு 4 பேருக்கு பிடியாணை

ஜனாதிபதியின் வீடு எரிப்பு 4 பேருக்கு பிடியாணை

CCTV காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவு

by Gayan Abeykoon
February 1, 2024 8:38 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள வாசஸ்தலத்திற்கு, கடந்த வருடத்தில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி கெமரா காட்சிகள் மற்றும் காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட,  நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாத நான்கு பேருக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த வருடம் ஜூலை மாதம் (09)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி வாசஸ்தலத்திற்கு, தீ வைக்கப்பட்ட போது தீ அனர்த்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு தீயணைப்புப்படை வந்தது. இவ்வாகனத்தை தடுத்து அரசாங்க ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT