எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா கட்சி தாவல் | தினகரன்

எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா கட்சி தாவல்

எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா கட்சி தாவல்-SB Dissanayake Dilan Perera Obtain SLPP Membership

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியில் இணைந்துள்ளனர்.

இன்று (29) முற்பகல், பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவிடமிருந்து, அக்கட்சியின் உறுப்புரிமையை அவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், சு.க. பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டதோடு, அதற்கு பதிலாக லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...