Game Color Plus, Dual Wi-Fi இனை OPPO அறிமுகம் | தினகரன்

Game Color Plus, Dual Wi-Fi இனை OPPO அறிமுகம்

Game Color Plus, Dual Wi-Fi இனை OPPO வெளியீடு-Game Colour Plus-Dual Wifi

அண்மையில் ஷங்காயில் இடம்பெற்ற ‘சைனாஜோய் கேமிங் எக்ஸ்போ’ நிகழ்வில் OPPO இரண்டு புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தது. “கேம் கலர் பிளஸ்” (“Game Color Plus”) எனும் மிகவும்-யதார்த்தமான பெரிதாக்கப்பட்ட இமேஜிங் (augmented imaging) மற்றும் சிறப்பு மிக்க “இரட்டை வைஃபை தொழில்நுட்பம்” (“Dual Wi-Fi technology”) ஆகிய வலையமைப்பு வேகத்தை அதிகரிக்கும் இரு தொழில்நுட்ப அம்சங்களை அது வெளியிட்டுள்ளது. குறித்த இரு தொழில்நுட்பங்களானது, கேமிங் காட்சிகளின் தரம், இணைப்பு வேகம் மற்றும் வலையமைப்புகளுக்கு இடையில் தடையின்றி மாறுதல் ஆகியவற்றின் மூலம் பயனர்களின் கேமிங் அனுபவங்களை மேம்படுத்த உதவியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் உடன் கைகோர்த்து, “கேம் கலர் பிளஸ்” (Game Color Plus) எனும் மிக யதார்த்தமான பெரிதாக்கப்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தை OPPO வெளியிட்டுள்ளது

OPPO மற்றும் குவால்காம் உடன் இணைந்து உருவாக்கியுள்ள தொழில்நுட்ப ஒத்துழைப்பின் விளைவான “கேம் கலர் பிளஸ்” மூலம், மொபைல் போன் கேம்களுக்கு, மேம்பட்ட காட்சி அம்சங்களை வழங்குகிறது. குவால்காம் ஸ்னப்ட்ரகன் எலைட் கேமிங் (Qualcomm Snapdragon Elite Gaming) மற்றும் ஸ்னப்ட்ரகனின் சுய-ஒத்துப்போதல் (self-adaptive) தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்பட்டுள்ள “கேம் கலர் பிளஸ்” ஆனது, கேமிங் காட்சிகளின் தரத்தை குறிப்பிடும்படியான வகையில் மேம்படுத்துகின்றது. குறிப்பாக ஒவ்வொன்றையும் வேறுபிரித்து காட்டுவதோடு, நிறச் செறிவு மற்றும் கேமிங் காட்சிகளின் மாறுபாடுகளையும் அது வெளிப்படுத்துகிறது.

விளையாட்டின் காட்சி வெளிப்படுத்துகையை மேலும் தெளிவாக்கம் செய்யும் திறனையும் “கேம் கலர் பிளஸ்” கொண்டுள்ளதுடன், கேமிங் காட்சிகளை OPPO ஸ்மார்ட்போன் திரைகளுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துகிறது. அதற்கமைய பயனர்களுக்கு மொபைல் போன் கேமிங் தொடர்பான சிறந்த காட்சி அனுபவத்தை அது வழங்குகிறது.

OPPO மற்றும் குவால்காம் இணைந்து, ஸ்னாப்ட்ரகன் எலைட் கேமிங் இனால் வலுவூட்டப்பட்ட “கேம் கலர் பிளஸ்” இன் அம்சங்களை தமக்கேற்ற வகையில் மாற்றம் செய்துள்ளதோடு, அதனை மேம்படுத்தியுள்ளது. அத்துடன், இரு தரப்பும் இணைந்து, அதன் பயனர் இடைமுகத்தின் (UI) வடிவமைப்பு, அளவீடு சரியாக்கம், குறைபாடுகளின் திருத்தங்கள் (Bug fixes), செயற்றிறன் மற்றும் மின்வலு சோதனைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளன. இவ்வாறான நெருக்கமான தொழில்நுட்ப ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாகும். அந்த வகையில், மேம்பட்ட கேமிங் காட்சிகளை வழங்குவது தொடர்பில் “கேம் கலர் பிளஸ்” ஐப் பயன்படுத்தும் உலகின் முதலாவது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக OPPO திகழ்கிறது..

“கேம் கலர் பிளஸ்” ஆனது ஒத்திசையும் மின் சேமிப்பு, மேம்பட்ட காட்சி தரம் மற்றும் சிறந்த மின்கல ஆயுட்காலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம், OPPO ஆனது குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் வன்பொருளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் பாரிய கணனி சக்தி தேவைப்படும் சாதனங்களை வடிவமைக்க உதவுகிறது. இதன் விளைவாக, விளையாட்டு பிரியர்கள் உயர் தரமான விளையாட்டு காட்சிகளை இரசித்துக்கொண்டிருக்கும் நிலையில் தங்கள் மொபைலானது, அதிக மின்சக்தியை பயன்படுத்துகின்றதா என்பது தொடர்பில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

இணைப்பு வேகத்தை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட்போன்களுக்கான “உண்மை” இரட்டை வைஃபை தொழில்நுட்பத்தை OPPO வெளியிட்டுள்ளது

கலர்ஓஎஸ் 6 (ColorOS 6) இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும், OPPO ஆனது தனது புதிய இரட்டை வைஃபை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இப்புதிய அம்சமானது சாதனங்களை, இரண்டு வெவ்வேறு வயர்லெஸ் நெட்வேர்க்குகளுடன் ஒரே நேரத்தில் இணைக்க அனுமதிப்பதோடு, தரவுகளை சுயாதீனமாக பெறவும் அனுப்பவும் உதவுகிறது. அத்துடன் சாதனத்தின் ஒட்டுமொத்த இணைப்பு வேகத்தை அதிகரித்து, மொபைல் கேமிங் மற்றும் வீடியோக்கள் தொடர்பான பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

OPPO இன் இரட்டை வைஃபை தொழில்நுட்பம் ஆனது, OPPO ரெனோவில் காணப்படும் DBS/DBDC Chip தொழில்நுட்பத்துடன் இணைந்து செயற்படுகிறது. இது ஸ்மார்ட்போன்களை இரண்டு வெவ்வேறு வைஃபை ஹொட்ஸ்பொட்களுடன் இணைக்க அனுமதிப்பதோடு, அவை ஒரே SSID ஐப் பகிர்வனவையாகவோ அல்லது இரண்டு வெவ்வேறு SSID களைக் கொண்டதாகவோ இருக்கலாம், ஆயினும் எவ்வித தடையும் இல்லாமல் இவ்விணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இது, இரண்டு ஹொட்ஸ்பொட்கள் உடனான dual-band கொண்ட வீட்டுப் பாவனை Router அல்லது இரு வெவ்வேறு Router களால் உருவாக்கப்பட்ட ஹொட்ஸ்பொட்களாக இருக்கலாம்.

முக்கியமாக இரண்டு சந்தர்ப்பங்களை ஈடு செய்ய இரட்டை வைஃபை தொழிற்பாடு இயக்கப்படுகிறது. முதலாவது, குறிப்பிட்ட வலையமைப்பு நிலைமையில் சாதனம் குறைந்த இணைப்பு நிலையை (poor connection) அடைதல். இந்நிலை ஏற்படும் போது, சாதனம் உடனடியாக மாற்று வைஃபை இணைப்புடன் தொடர்புறும். இரண்டாவது, பயனர் கோப்புகளை பதிவிறக்கும் போதான நிலை, இதன்போது, பதிவிறக்கல் வேகத்தை துரிதப்படுத்தும் வகையில் சாதனம் இரட்டை வைஃபையை செயல்படுத்துகிறது.

OPPO இன் இரட்டை வைஃபை தொழில்நுட்பம் ஆனது, சாதனங்களை இரண்டு ஹொட்ஸ்பொட்களுடன் இணைப்பதற்காக, கொள்கை அடிப்படையிலான ரூட்டிங் (policy-based routing) மற்றும் இணைப்பு திரட்டுதல்/ திசைதிருப்பல் (aggregation/diversion) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இரு இணைய இணைப்பு வழிகளை வழங்குவதன் மூலம் இரண்டு வைஃபை இணைப்புகளை உருவாக்க உதவுகிறது. இந்த செயல்பாட்டைக் கொண்ட OPPO மொபைல் போன், வலையமைப்பு வேகத்தை இரட்டிப்பாக்குவதோடு, தடையற்ற வகையில் வலையமைப்பு மாற்றத்தையும் மேற்கொள்கின்றது. பயனர்கள் இணைப்பு துண்டிப்பின்றிய வகையில் விளையாடுவதற்கான வலைப்பின்னல் இணைப்பு (networking)  அனுபவத்தை பெறவும் அனுமதிக்கிறது. அத்துடன் இணைய பக்கங்களை எவ்வித காத்திருப்பும் இன்றி திறக்கவும், ஒன்லைனில் வீடியோக்களை வேகக் குறைவின்றி பார்க்கவும் உதவுகின்றது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.

2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.

200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...