Huawie EMUI 10 அறிமுகம் | தினகரன்


Huawie EMUI 10 அறிமுகம்

Huawie EMUI 10 அறிமுகம்-Huawie EMUI 10 Launch

சீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei தனது EMUI10 வடிவமைப்பினை உத்தியோகபூர்வமாக அறிமுகம்செய்து வைத்தது.

Huawei வாடிக்கையாளர் வியாபாரக் குழுமத்தின் மென்பொருள் பொறியியல் துறை தலைவர் Dr. வாங் செங் லூ, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இணையற்ற அனுபவத்தினை வழங்கும் பரந்துபட்ட தொழில்நுட்பத்தின் முன்னோடியாக EMUI10 வடிவமைப்பானது அமைகிறது எனக் குறிப்பிட்டார்.

இந்த புத்தம்புதிய வடிவமைப்பானது, பிரத்தியேகமான சந்தர்ப்பங்களிலான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுதல், வியாபாரம் சார்ந்த பணிகள் மற்றும் வாகனங்களில் பொருத்தக்கூடிய ஸ்மார்ட் சாதனமாக செயற்படுதல் போன்ற பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வெவ்வேறு பணிகளுக்கென பலதரப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான தேவை இல்லாமற் போவதுடன், குறைந்த செலவில் அதிக செயல்திறனுடன் கூடிய இணையற்ற அனுபவத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Huawie EMUI 10 அறிமுகம்-Huawie EMUI 10 Launch

அறிமுக விழாவின் இறுதியில் கருத்துத் தெரிவித்த Dr. வாங், EMUI10 Beta Version (ஆரம்ப பதிப்பு) தொடர்பான உள்ளகத் தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் Huawei P30 மற்றும் ஏனைய மொடல்களில் செப்டெம்பர் 8 அளவில் நிறைவடையுமெனவும், அதனைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான தயாரிப்புகளில் EMUI10 அறிமுகப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

Huawei EMUI ஆனது இற்றைவரை 216 நாடுகளில் 77 மொழிகளைப் பேசும் 500 மில்லியனுக்கும் அதிகமான நாளாந்தம் உபயோகிக்கும் பயனாளர்களைக் (DAU) கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு EMUI1.0 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வந்த 7 ஆண்டுகளில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

புள்ளிவிபரங்களின் பிரகாரம் EMUI8.0 மற்றும் EMUI 9.0 ஆகியவற்றின் பயனாளர் மேம்படுத்தல்கள் முறையே 79% மற்றும்  84% ஆகக் காணப்பட்டதுடன், EMUI10 இன் அறிமுகமானது 150 மில்லியன் பயனாளர்களை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக Huawei EMUI செயல்திறன் அதிகரிப்பு தொடர்பான ஆய்வுகளிலான தனது முதலீடுகளை அதிகரித்துவருகிறது. GPU Turbo தொழில்நுட்பமானது கிராபிக்ஸ் செயல்திறனை 60% இனால் அதிகரித்துள்ளதுடன், Link Turbo network தொழில்நுட்பமானது 4G மற்றும் WiFi வலையமைப்புகளை இலகுவாக அணுகுவதற்கு அனுமதிப்பதுடன், குறிப்பாக 4G வலையமைப்பினைப் பயன்படுத்தி 70% விரைவாக அணுகுவதற்கும் வழிவகுக்கின்றது. EROFS மேம்பட்ட கோப்பு முறையானது அன்ட்ரொய்ட் வாசிப்புத் திறனை 20% இனால் அதிகரிப்பதுடன், Ark Compiler ஆனது மூன்றாம் தரப்பு செயலிகளின் பயன்பாட்டினை 60% இனால் அதிகரிக்கிறது.

EMUI10 ஆனது UX வடிவமைப்பு, அனைத்து சந்தர்ப்பங்களுக்குமான இணையற்ற வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் விரைவான செயற்பாட்டிற்கான புதிய தரநியமம் ஆகிய மூன்று முக்கியமான மேம்படுத்தல் அம்சங்களைக் கொண்டுள்ளது. EMUI10 Dark Mode வசதியானது அதிக வெளிச்சத்தில் தெளிவான காட்சிப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் எழுத்துருவங்கள் மற்றும் ஏனைய சின்னங்களை இலகுவாகவும் தெளிவாகவும் அடையாளங்காண்பதற்கு முடிகிறது. இது தவிர, EMUI10 தொடர்பான மேலும் பல UX வடிவமைப்பு அம்சங்கள் ஓகஸ்ட் மாத EMUI UX வடிவமைப்பு அறிமுக விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

EMUI10 பல்வேறு சாதனங்களுக்கிடையிலான HD வீடியோ அழைப்புகளுக்கென புரட்சிகரமான பரந்துபட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.  இதன் வாயிலாக பயனாளர்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திலிருந்து குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கு முடிகிறது. குறிப்பாக உள்வரும் அழைப்புகளை ஸ்மார்ட் ஸ்பீக்கரினைப் பாவிப்பதன் மூலம் அணுகவும், வீடியோ அழைப்புக்களை தொலைக்காட்சி மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள திரை அல்லது நிகழ்நேர அடிப்படையில் ஆளற்ற விமானத்திலிருந்தான வீடியோ காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது.  அத்தோடு, அலுவலகங்களில் ஸ்மார்ட்போன்   மற்றும் கணனி திரைகளை பகிர்ந்துகொள்வதன் வாயிலாக தரவுகளை இலகுவாகப் பரிமாற்றும் செய்வதற்கும் முடிகிறது.

பரந்துபட்ட தொழில்நுட்பமானது பயனாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தினை வழங்கும் அதேவேளை அனைத்து சந்தர்ப்பங்களுக்குமான வன்பொருள் மற்றும் மென்பொருள் பாதுகாப்பு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்கென சிப் கட்டமைப்பு மற்றும் கருவினை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக Huawei கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பு காணப்படுகிறது. நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 100 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் விற்பனையானதுடன், EMUI வாயிலாக எதிர்காலத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பயனாளர்களின் வசதி கருதி அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. Huawei Ark Compiler மற்றும் Huawei Huawei DevEco Studio போன்ற புத்தம்புதிய போன்ற புத்தம்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், மேம்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய தொழில்துறை வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் வாயிலாகவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இணையற்ற பயனாளர் அனுபவத்தினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தம்புதிய மாடல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை Huawei இன் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளமுடியும்.


Add new comment

Or log in with...