தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் அமைப்பை சேர்ந்த இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து, இச்சந்தேகநபர்கள் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் பொல்கொல்லை, வத்தேகெதர பகுதியை சேர்ந்த அபூஅனஸ் என அழைக்கப்படும் முஹம்மது ரைசுத்தீன் அப்துல் ரஹுமான் மற்றும் ஹம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் மாவனல்லை, கொந்தெனியகொட பகுதியை சேர்ந்த அபூராவா என அழைக்கப்படும் செய்னுல் ஆப்தின் ஹஸீல் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment