புகையிரத சேவை அத்தியாவசிய சேவை; மேலும் நீடிப்பு | தினகரன்


புகையிரத சேவை அத்தியாவசிய சேவை; மேலும் நீடிப்பு

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பான  அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நீடிக்கும் வகையில் மீண்டும்ஜனாதிபதியினால் நேற்று விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

அந்த வர்த்தமானி அறிவிப்பின் படி பயணிகள் மற்றும் சரக்குகள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளுக்குமான புகையிரத சேவை மற்றும்  அது தொடர்பான புகையிரத பாதை பராமரிப்பு, முறையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பான சமிக்ஞை தொகுதிகள், செயற்பாடுகள், பயணச்சீட்டுகள் உள்ளிட்ட புகையிரத திணைக்களத்தினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து சேவைகளும் உள்ளடங்கும் வகையில்  மீண்டும் அவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...