இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து | தினகரன்

இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

மருதானை மற்றும் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இன்று (28) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதமும், மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதமுமே மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தை தொடர்ந்து கொழும்பு, கோட்டையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிச் சென்ற புகையிரத சாரதி, உதவியாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

 


Add new comment

Or log in with...