இந்தியா வலுவான நிலையில் | தினகரன்


இந்தியா வலுவான நிலையில்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 260 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. அண்டிகுவா, சேர் விவ் ரிச்சட்ஸ் அரங்கில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களை எடுத்துள்ளது.

அணித்தலைவர் விராட் கொஹ்லி (51) மற்றும் அஜின்கியா ரஹானே (53) அரைச்சதங்கள் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ஓட்டங்களை பெற்றதோடு மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...