முப்படை கரப்பந்தாட்டம்; இராணுவ அணி சம்பியன் | தினகரன்


முப்படை கரப்பந்தாட்டம்; இராணுவ அணி சம்பியன்

முப்படை கரப்பந்தாட்டம்; இராணுவ அணி சம்பியன்-Tri Forces Volleyball-Army Champion

புனித சேவியர் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரில், இலங்கை இராணுவ அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மாரவில புனித சேவியர் கல்லூரியின் கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் விமானப் படை அணியை 3 - 0 என மூன்று சுற்றுக்களையும் வெற்றி பெற்ற இராணுவ அணி வெற்றி வாகை சூடி கொண்டது.

முப்படை கரப்பந்தாட்டம்; இராணுவ அணி சம்பியன்-Tri Forces Volleyball-Army Champion

லீக் சுற்றில் விமானப் படை அணியை 2 - 0 என தோற்கடித்த இராணுவ அணி, அரையிறுதி சுற்றில் கடற் படை அணியை 2 - 0 என தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத்தொடரில் இராணுவ அணி, கடற்படை அணி, விமானப் படை அணி ஆகியன பங்குபற்றியிருந்தன.

இராணுவ அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக, அவ்வணியின் சிறந்த முன்னாள் வீரரான, சார்ஜன்ட் டப்ளியூ.எம். திசேரா செயற்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...