கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா | தினகரன்

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா நாளை (16) வெகு சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களுக்கான சேவைகளை கடற்படையினர் வழங்கி வருகின்றனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் வருகைதந்த வண்ணமுள்ளனர்.

திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின்  நன்மை கருதி இன்று (15) அதிகாலை முதல் யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ் சேவைகளும், குறிகட்டுவான்  இறங்குதுறையிலிருந்து படகுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாளை (16)  காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விசேட பஸ் சேவைகளும்; நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பயண ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதுடன்,  100க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவைச் சேர்ந்த 2ஆயிரத்து 200பேருக்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்துகொள்வார்களெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)  

 


Add new comment

Or log in with...