நியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு | தினகரன்


நியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு, தொடர்பாடல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ, 15 பேர்களைக் கொண்ட குறித்த பட்டியலுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

அஞ்சலோ மெத்திவ்ஸ், திசர பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்படவில்லை என்பதுடன், தனுஷ்க குணதிலக்க மீண்டும் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம்

லசித் மாலிங்க - தலைவர்

நிரோஷன் திக்வெல்ல - பிரதி தலைவர்

அவிஷ்க பெனாண்டோ

குரல் ஜனித் பெரேரா

தனுஷ்க குணதிலக்க

குசல் மெண்டிஸ்

செஹான் ஜயசூரிய

தசுன் ஷானக்க

வணிந்து ஹசரங்க

அகில தனஞ்சய

லக்ஷான் சந்தகன்

இசுரு உதான

கசுன் ராஜித

லஹிரு குமார

லஹிரு மதுசங்க


Add new comment

Or log in with...