குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் | தினகரன்


குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துகள்

பெற்றோர்கள் தம் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். அதற்காகக் குழந்தைகளின் ஊட்டச்சத்துகள் முதல் உடற்பயிற்சி வரையும் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி, அக்குழந்தை தன் தாயின் கர்ப்பத்தில் கருவாக இருக்கும்போது ஆரம்பித்து விடும். குழந்தை கருவில் இருக்கும் போது 17முதல் 20அங்குலங்கள் வரை வளரலாம். 

ஆனால் ஒருவரின் வளர்ச்சியை வளர்ச்சி ஹோர்மோன் தான் தீர்மானிக்கும். இந்த ஹோர்மோனைச் சுரக்கும் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்கு பின்புறமாக அமைந்துள்ளது. இது உடலின் பல்வேறு சுரப்பிகளது செயல்பாட்டை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. 

இந்த ஹோர்மோன் தான் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் என்புபுகளின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இந்த ஹோர்மோன் சுரப்பு குறைவதற்கும், கூடுவதற்கும் கட்டிகள், கிருமி தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் என்பன காரணங்களாக அமைலாம். 

பொதுவாக ஒருவரின் முதற்கட்ட வளர்ச்சி குழந்தையாகப் பிறந்ததது முதல் 12வயது வரை நிகழும். இப்பருவத்தில் பல் விழுந்து முளைத்தல், என்புபுகள் கூடுதல் என்பன சீரான ஒழுங்கில் வளர்ச்சி அடையும்.

இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆணுக்கும் பெண்ணுக்கும் 13வயதில் ஆரம்பித்து 18வயது வரை நீடிக்கும் (சிலருக்கு 23வயது வரையும் அமையலாம்).  

இக்காலப்பகுதியில் இந்த ஹோர்மோன்கள் அபரிமிதமாகக் காணப்படும். இளம் வயதில்தான் உறுப்புக்களின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

அதனால் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்பு வகைகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக வழங்க முடியும். அவை இளம் வயதினருக்கு பெரிதும் நன்மை பயனக்கூடியதாக இருக்கும். 


Add new comment

Or log in with...