என்புப் புற்றுநோய்க்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகள் | தினகரன்


என்புப் புற்றுநோய்க்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகள்

கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கக்கூடிய சில கட்டிகள் உடலின் இரும்பு என்றழைக்கப்படும் என்புபுகளைக் கூட தாக்க முடியும். உடலிலுள்ள கலங்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன. இக்கலங்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் கலங்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்றப் பகுதிக்கு பரவும் தன்மை கொண்டது. இத்தன்மை பெரும்பாலும் புற்று நோய் கட்டிகளுக்கு உண்டு.  

என்றாலும் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கொண்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விடயமாகும். என்புபில் ஏற்படும் கட்டிகளில் இருவகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று பரவும் தன்மையையும் மற்றையது பரவாத தன்மையையும் கொண்டுள்ளது.  

இருப்பினும் பரவாத தன்மை கொண்ட கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து அற்றது. இதற்காக அளிக்கப்படும் சிகிச்சைக்கு பலன்கள் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை அளித்த போதிலும் ஆபத்து உள்ளது. இந்த என்புபுப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையின் மூலம் 60வீதம் உறுதிப்படுத்தி விடலாம். அத்தோடு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோனைகளின் ஊடாகவும் இந்நோய் பரவியுள்ள அளவையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதேநேரம் புற்றுநோய் வகையையும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையும் திசுப் பரிசோதனை மூலமும் உறுதியாகக் கூறிவிடலாம்.  

மேலும் என்புபில் ஏற்படும் புற்றுநோய்களில் இரு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று முதல் நிலை மற்றையது இரண்டாம் நிலை என்றபடி என்புபு புற்று நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் முதல் நிலை எலும்பு புற்று நோய் இருபது வயதுக்குக் கீழ் அல்லது ஐம்பது, அறுபது வயதுகளில் தாக்கம் ஏற்படுத்தலாம். இவ்வகைப் புற்றுநோய் என்புபில் தோன்றி ஏனைய இடங்களுக்கு பரவலாம். குறிப்பாக தோள் பட்டை, கை மணிக்கட்டு, முழங்கால் மூட்டு போன்ற இடங்களில் இப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.  

அதேநேரம் இரண்டாம் நிலை என்புபு புற்று நோய் பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களையே பெரும்பாலும் தாக்கும். இது உடலின் வேறு பாகத்தில் தோற்றம் பெற்று புற்றுநோயாகப் படிப்படியாக பரவி என்புபினை பாதிக்கும். இவ்வகைப் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் நோயாளர்களைப் பொறுத்து வேறுபடலாம். அத்தோடு இந்நோய் ஏற்படும் இடங்களைப் பொறுத்து புற்றுநோயின் அறிகுறிகளையும் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, என்புபு முறிவு போன்றவாறான பொதுவான அறிகுறிகள் காணப்படுமாயின் தாமதியாது தகுதிமிக்க மருத்துவரை அணுகி ஆலோசனைகளுடன் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதோடு பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த அறிகுறிகளுக்கான காரணத்தையும் கண்டறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிலருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகளைப் பாவித்த பின்பு அது குணமடைந்து விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து காணப்பட்டால் அது தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்ள கூடாது. தாமதியாது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வதே பயன்மிக்கதாக இருக்கும்.  

இவ்வகைப் புற்று நோய்களுக்காக ஹீமோ தெரபி, ரேடியோ தெரபி, அறுவைச் சிகிச்சை என்றபடி சிகிச்சை முறைகள் புழக்கத்தில் உள்ளன. அதாவது ஹீமோ தெரபி சிகிச்சை மூலம் புற்று நோய் கலங்களின் வளர்ச்சியைக் குறைக்கலாம். அத்தோடு அதனைக் கட்டுப்படுத்தும் மருந்துகளையும் பாவிக்க வேண்டும். அதேநேரம் ரேடியோ தெரபி சிகிச்சை மூலம் கதிரியக்க அலைகளைப் பாவித்து புற்றுநோய்க்கலங்கள் அழிக்கப்படும்.  

ஆனால் அறுவை சிகிச்சை முறைமையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவதைக் குறிக்கும். அதாவதுபுற்று நோயால் பாதிக்கப்பட்ட என்புபை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து என்புபை எடுத்து,

மாற்றி வைத்தல் அல்லது Stainless Steel ல் செய்த என்புபை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துதல் அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று என்புபுகளைப் பொருத்தி சிகிச்சை அளித்தல் என்றபடி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இவ்வகைச் சிகிச்சைகளின் மூலம் என்பு புற்று நோயிலிருந்து குணம் பெற்று தரமான வாழ்க்கை வாழ வழி செய்து கொள்ளலாம். 


Add new comment

Or log in with...