மன்னாரில் 574.5 கி.கி. பீடி இலைகள் மீட்பு | தினகரன்

மன்னாரில் 574.5 கி.கி. பீடி இலைகள் மீட்பு

மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார் மற்றும் தலைமன்னாரில் நாடுகுடா, சவுத்பார், ஓலைத் தொடுவாய், ஓல்ட்பியர் ஆகிய கடற்கரை பகுதிகளில் சோதனை நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட 574.5கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் 10பொதிகளில் அடைக்கப்பட்டு காணப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...