அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை | தினகரன்


அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை-Lifting of emergency regulations will not impact the banning of Terrorist organisations and investigationsRuwan-Gunasekara.jpg

தீவிரவாத அமைப்புகளின் தடையிலும் மாற்றமில்லை

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை காரணமாக, தீவிரவாத அமைப்புகள் மீது விடுக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் எவ்வித மாற்றுமும் ஏற்படாது என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அதன் தலைவர், தினேஷ் தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை காரணமாக, தீவிரவாதிகள், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் மற்றும் தீவிரவாதிகளின் சொத்து முடக்கம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சட்டம் தொடர்பான எவ்விதமான தெளிவுகளும் இன்றி குறித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதை எம்மால் அறிய முடிகின்றது.

மூன்று அமைப்புகளின் பெயர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம், விலாயத் அஸ்ஸெய்லானி ஆகிய அமைப்புகளை அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அமைப்புகள் மூன்றும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக, 2019.05.13 எனும் திகதியிடப்பட்ட இல 2123/3 எனும் அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தன.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தீவிரவாத தடுப்பின், தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்கு அமைய குறித்த அமைப்புகள் மூன்றும் தடை செய்யப்பட்டிருந்தன.

அதற்கமைய அவசரகால  சட்டத்தை நீடிக்காது இருப்பதன் மூலம் குறித்த அமைப்புகளின் தடை மற்றும் அவ்வமைப்புகள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் 200 பேரும் விடுவிக்கப்படுவர் என, மற்றுமொரு பிழையான செய்தியும் குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும், அவசரகால சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள், தீவிரவாத தடுப்பு தற்காலிக சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், அவசரகால சட்டத்தை நீடிக்காமையானது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளையோ, குறித்த கைது தொடர்பிலோ, தடுத்து வைப்பு தொடர்பிலோ, தீவிரவாதிகளின் சொத்துகளை தடை செய்திருப்பது தொடர்பிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை-Lifting of emergency regulations will not impact the banning of Terrorist organisations and investigationsRuwan-Gunasekara.jpg


Add new comment

Or log in with...