காணாமல் போனோர் யாழ். பிராந்திய அலுவலகம் திறப்பு | தினகரன்


காணாமல் போனோர் யாழ். பிராந்திய அலுவலகம் திறப்பு

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (24) காலை  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வேண்டாமென காணாமற்போனரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர் என்பதோடு, இந்த அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று காலை  குறித்த அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பருத்தித்துறை விசேட நிருபர் – நிதர்சன் விநோத்)

 


Add new comment

Or log in with...