அமைதி காக்க முப்படையினருக்கு அழைப்பு | தினகரன்


அமைதி காக்க முப்படையினருக்கு அழைப்பு

ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டில் சமாதானத்தை பேணும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினரை (முப்படையினரை) பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்க படாத நிலையில்,பொது அமைதியை பேணும் பொருட்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்புக்காக,முப்படை வீரர்களை பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...