அவசரகால சட்டம் நீடிக்கப்படாது! | தினகரன்

அவசரகால சட்டம் நீடிக்கப்படாது!

அவசரகால சட்டம் நீடிக்கப்படாது!-state of emergency removed or will not be extended-Defence Secretary Shantha Kottegoda

அவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அவசரகால சட்டம் மாதாந்தம் நீடிக்கப்பட்ட நிலையில் நேற்றுடன் குறித்த நீடிப்பு நிறைவடைந்துள்ளது.

அதற்கமைய அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது


Add new comment

Or log in with...