Friday, March 29, 2024
Home » ஆங்கில மொழியை விருத்தி செய்யும் நோக்கில் ‘ஸ்மார்ட் பலகை’ வழங்கல்
வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு

ஆங்கில மொழியை விருத்தி செய்யும் நோக்கில் ‘ஸ்மார்ட் பலகை’ வழங்கல்

by mahesh
January 31, 2024 1:30 pm 0 comment

வடமத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 48 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகை வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் மாகாண சபை கூட்ட மண்டபத்தில் (30) நடைபெற்றது.

நான்கு இலட்சம் ரூபா பெறுமதிமிக்க 48 ஸ்மார்ட் பலகைகளை முன்னணி ஆடைத் தொழிற்சாலையான ‘பிரதண்டெக்ஸ்’ நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண பாடசாலை சிறுவர்களின் ஆங்கில மொழியை விருத்தி செய்யும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதண்டெக்ஸ் நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் ஸ்மார்ட் பலகைகள் வழங்கப்படுகின்றன. இதனடிப்படையில் இது வரைக்கும் 82 ஸ்மார்ட் பலகைகள் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தரம் 03- 09 வரை பாடசாலைகளில் ஆங்கில கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக மென்பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த செயற்திட்டத்திற்கு முன்நோடியாக “ரைட் டு ரெடி” ஆங்கில மொழி மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை ஒன்றும் 48 பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அதிபர்கள் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்கள் என 96 பேர் கலந்து கொண்டனர். தேசிய மொழியியான ஆங்கில மொழியை பாடசாலை மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதன் போது ஆளுநரின் செயலாளர் விஜய வணசிங்க, மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யு. சமரகோன், செயற்திட்ட பணிப்பாளர் பிரசாத ஜயவர்தன, ஆங்கில மொழி பணிப்பாளர் காஞ்சனா ஜயவர்தன பிரதண்டெக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் செந்தில் ஈஸ்வரன், அதன் ஆலோசகர் செஹான் பிரசாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT