ரிக்கி பொண்டிங்கின் 14 வருட ரி20 சாதனையை கனடா வீரர் முறியடிப்பு | தினகரன்


ரிக்கி பொண்டிங்கின் 14 வருட ரி20 சாதனையை கனடா வீரர் முறியடிப்பு

20க்கு20 அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பொண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் கனடா வீரர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங். 20க்கு20 அறிமுக போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2005-ல் 98 ஓட்டங்கள் குவித்தார். இதுதான் 14 வருட கால சாதனையாக இருந்தது. இந்நிலையில் 20க்கு20 உலகக் கிண்ணத்துக்கான தகுதி தொடரில் கனடா அணி கெய்மன் தீவு அணியை எதிர்கொண்டது. இதில் கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர்பால் சிங், தனது அறிமுக போட்டியில் 48 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், 10 சிக்சருடன் 101 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் என்ற ரிக்கி பொண்டிங் சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளதோடு, ரி20 அறிமுக போட்டியில் சதம் அடித்த முதலாவது வீரர் எனும் பெருமையையும் தனதாக்கியுள்ளார். டேவிட் வோர்னர் 89 ஓட்டங்களும், கனடாவைச் சேர்ந் ஹிரால் பட்டேல் 88 ஓட்டங்களும், குவைத்தைச் சேர்ந்த அட்னான் இத்ரீஸ் 79 ஓட்டங்களும் அடித்துள்ளனர்.


Add new comment

Or log in with...