பிரிமா கொத்து மீ யின் 'ஹொட் அன்ட் ஸ்பைஸி கிரிக்கெட்' | தினகரன்


பிரிமா கொத்து மீ யின் 'ஹொட் அன்ட் ஸ்பைஸி கிரிக்கெட்'

வெற்றிகரமாக நிறைவு பெற்ற ஊக்குவிப்பு நிகழ்வு

பிரிமா கொத்து மீ யின் 2019 ஆம் ஆண்டுக்கான 'ஹொட் அன்ட் ஸ்பைஸி கிரிக்கெட்' நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இவ்வருடம், வழமைக்கு மாறாக, ஒரு மாதம் அல்லாமல் இரண்டு மாதங்கள் வரை இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தன. உற்பத்தியை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டது. ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முடிவடைந்த இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பிரிமா கொத்து மீ யின் ஆர்வலர்களுக்கு நாளாந்தம், வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ற அடிப்படையில் பல்வேறு பரிசுகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புக்களை வழங்கியது. இந்த ஊக்குவிப்பு நிகழ்ச்சியானது, கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு சமாந்தரமாக நடத்தப்பட்டதோடு, கிரிக்கெட் போட்டிகளின் குதூகலத்திற்கு பிரிமா கொத்து மீ யை இணைத்துக் கொள்ளும் வகையில் இது அமைந்திருந்தது.

ஒவ்வொரு பிரிமா கொத்து மீ பக்கெட்டிலும், உட்புறமாகக் காணப்படும் Code இனை SMS மூலம் '2343' என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் போட்டியில் கலந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதுவரை காலம் கிடைக்கப் பெறாத அளவுக்கு பெருந்தொகையான SMS குறுந்தகவல்கள் இம்முறை கிடைக்கப் பெற்றன. நாளாந்தம் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஸ்மாட் கைக் கடிகாரங்களும் (Fitness Bands) பெற்றுக்கொடுக்கப்பட்டன. வாராந்தம் இரண்டு வெற்றியாளர்களுக்கு சம்சுங் கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டன. மேலும் 8 வெற்றியாளர்கள் வாராந்தம் ரூபா 50,000 பணப் பரிசுகளை வென்றுள்ளனர். இறுதிப் போட்டி வெற்றியாளர் ரூபா 250,000 பெறுமதியான பணப் பரிசை வென்றுள்ளார். இவர் அறநாயக்கவைச் சேர்ந்த டீ.ஆர்.கசுன் மலிந்த சூரியவன்ச என்பவர் ஆவார். பிரிமா கொத்து மீ குதூகலத்தை விரும்பும் இந்த உற்பத்தியானது 'ஹொட் அன் ஸ்பைஸி கிரிக்கெட்' ஊக்குவிப்பு நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி வருகிறது. அது தனது உற்பத்தியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகளையும் வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...