பிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட் | தினகரன்


பிரிடிஸ் கவுன்சிலுடன் கைகோர்க்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபை, முஸ்லிம் எய்ட்

முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன் இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து இளைஞர் சமூகமயமாக்கம் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. அனுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் எய்ட் உம் தொழில்பயிற்சி அதிகாரசபையும் புரிந்துணர்வு அடிப்படையில் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின் கீழ் மேற்படி 03மாவட்டங்களையும் சேர்ந்த பயிற்சி நிலையங்களில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு, பிரிடிஸ் கவுன்சிலின் முன்மாதிரி திட்டமான அக்டிவ் சிடிசன் சட்டகத்தின் கீழ் பயிற்சியளிக்கப்படுகின்றது.  

2013ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் எய்ட் பிரிடிஸ் கவுன்சில் நிறுவனத்தின் பங்காளர் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. உலகலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, அக்டிவ் சிட்டிசன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இளைஞர்களைப் போதனையூட்டிப் பயற்றுவிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பங்காளர் அமைப்புகளில் முஸ்லிம் எய்ட் நிறுவனமும் முன்னணிப்பாத்திரம் வகித்தது. இளைஞர்கள் தாம் வாழும் கிராமங்களிலும் சமூகத்திலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தாமே முன்வந்து தீர்வுகாணும் வகையில் அவர்களைப் பயிற்றுவிப்பது இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.  

பிரிடிஸ் கவுன்சில் ஆக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித் திட்டத்தினைப் பயன்படுத்தி, சமூக ரீதியில் ஆற்றல் மிக்கவர்களாகவும், சமூக நீதி, சமூக மயமாக்கம் மற்றும் சமூக இணக்கப்பாடு என்பவற்றை தாம் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தக் கூடியவர்களாகப் பயிற்றுவிப்பது இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதன் நோக்கமாகும்.  

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி என்பவற்றுடன் வலுவான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை பிரதான செயற்பரப்புகளாகக் கொண்ட நீடித்த அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழ், ‘இளைஞர் சமூகமயமாக்கம்’ என்ற அக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, முஸ்லிம் எய்ட் இக் கருத்திட்டத்தினை உள்ளீர்த்துள்ளது.   


Add new comment

Or log in with...