டோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு | தினகரன்


டோக்கியோ சீமெந்தின் புதிய நிலையம் திருகோணமலையில் திறப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், திருகோணமலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப செயற்பாடுகள், R&D வசதிகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் ஆகியன அடங்கியுள்ளன. இதனூடாக உயர் தரத்தை பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்பச் சிறப்புக்கான நிலையத்தை, UBE இன்டஸ்ரீஸ் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மிட்சு ஊனோ திறந்து வைத்தார். இவருடன், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தலைமை அதிகாரி ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையே பல தசாப்த காலமாக தொடரும் நட்பையும் பங்காண்மையையும் கவனத்தில் கொண்டு, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் அவர்களின் அழைப்பில், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் கெனிசி ககேயா இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். பணிப்பாளர் சபையின் சகல அங்கத்தவர்களும், சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப பங்காளரான ருடீநு இன்டஸ்ரீஸ் லிமிடெடினால், இந்த தொழில்நுட்ப சிறப்பு நிலையத்தை நிறுவுவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. டோக்கியோ சீமெந்தின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப உள்ளடக்கங்களுடனான ஆய்வுகூடம் மற்றும் தர உத்தரவாத வசதிகள் போன்றன இதில் அடங்கியிருந்தன. 

நிறுவனத்தின் முழு தன்னியக்கமான உற்பத்தி செயன்முறை தொடர்பான மையப்படுத்தப்பட்ட மேலோட்டத்துக்கு நிர்வாக வசதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த தொழில்நுட்ப கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையில் காணப்படும் நான்கு சீமெந்து உற்பத்தி ஆலைகளின் உற்பத்தி செயன்முறைகளை மதிநுட்பமான வகையில் முன்னெடுப்பதற்கான நவீன மத்திய ஆணை அறை அமைந்துள்ளது. மேலும், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் இரு Biomass வலு ஆலைகளினால், முழு செயற்பாட்டுக்கும் அவசியமான புதுப்பிக்கத்தக்க சூழலுக்கு நட்பான வலு பிறப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இவற்றை மத்திய ஆணை செயற்பாட்டு பகுதியினூடாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளை நிறுவுவதில் ஜப்பானின் UBE இன்டஸ்ரீஸின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் உட்கட்டமைப்புகளுடனான நவீன முகாமைத்துவ தகவல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செயன்முறையில் அதிகளவு நுணுக்கத்தை செயற்படுத்தியுள்ளது.   


Add new comment

Or log in with...