சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது | தினகரன்

சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது

கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியமை தொடர்பிலேயே குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து டிங்கி படகு, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.  


Add new comment

Or log in with...