மாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா? | தினகரன்


மாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா?

மாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா?-PC Election When-SC 5 Bench will Announce President

உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்றி, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும் என பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து கோரியதை அடுத்து இன்று (23) அது தொடர்பான விசாரணைகளை முடித்த பின்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஜனாதிபதியின் மனுவுக்கு எதிராக, 13 தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் இன்று (23) உச்ச நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது கருத்துகளை வெளியிட்டார்.

புவனேகா அலுவிஹாரே, சிசிர டி அப்றூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகியோரே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடியதாக அமையுமா என்பது குறித்தான இறுதி முடிவு, உச்சநீதிமன்ற கருத்தின் முடிவுகளின் அடிப்படையில் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...