இரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் | தினகரன்

இரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

முஹம்மட் காசீம் முஹம்மட் பைசல் - சுகாதார, போஷணை மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

கடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  இராஜாங்க அமைச்சர்களான முஹம்மட் காசீம் முஹம்மட் பைசல் மற்றும் செய்யட் அலி ஸாஹிர் மௌலானா  ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (23) இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 

சுகாதார, போஷணை மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக முஹம்மட் காசீம் முஹம்மட் பைசல் பதவியேற்றுள்ள அதேவேளை, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக செய்யட் அலி ஸாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

செய்யட் அலி ஸாஹிர் மௌலானா - ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்


Add new comment

Or log in with...