வறிய மக்கள் சார்பாக செயற்படும் தலைவரே நாட்டுக்குத் தேவை | தினகரன்


வறிய மக்கள் சார்பாக செயற்படும் தலைவரே நாட்டுக்குத் தேவை

வறிய மக்களின் தரப்பிலிருந்து செயற்படும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை. அவ்வாறான ஒருவர் இவ்வருட இறுதிக்குள் உருவாகி மக்கள் நல ஆட்சியை உருவாக்குவாரென, பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜெயமஹ தெரிவித்தார்.

மக்கள்வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 2019இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு தலைவரின் ஆட்சி யுகங்களே கடந்த காலத்தில் உருவாகின. மக்கள் யுகம் ஒருபோதும் உருவாகவில்லை. இம்முறை மக்கள் நல ஆட்சி உருவாகும். அதற்கு தகுதியுள்ள தலைவரை உருவாக்கும் தேவை மக்கள் மத்தியிலிருந்து தலைதூக்கியுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்.    மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...