சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது | தினகரன்


சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில்  சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 பேர் நேற்றிரவு (21)  கைது செய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள் பொகவந்தலாவை, செல்வகந்த தோட்டப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 27 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் – நோட்டன் இராமச்சந்திரன்)

 


Add new comment

Or log in with...