டாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ் | தினகரன்


டாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்

யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா பத்மநாபன், யோகிபாபு நடித்துள்ள படம் டாணா. வைபவின் நடிப்பில் வந்த மேயாத மான் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் அதிக கவனத்துடன் இருக்கிறார் வைபவ். அவரது நடிப்பில் ஆர்.கே. நகர், சிக்ஸர், காட்டேரி உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. டாணா படத்தில் முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வைபவ்.

வழக்கமாக போலீஸ் கதை கொண்ட படங்கள் ஹீரோயிசம் அதிகம் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் டாணா வழக்கத்திற்கு மாறான படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். வைபவிற்கும் யோகிபாபுவிற்குமான காட்சிகள் தியேட்டரில் சிரிப்பு அலையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என உறுதியாக நம்புகிறார் இயக்குநர். வரும் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Add new comment

Or log in with...