ட்ரோன்களை கணக்கெடுக்க நடவடிக்கை | தினகரன்


ட்ரோன்களை கணக்கெடுக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு  சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த கணக்கெடுப்புக்கான விண்ணப்பப்படிவம் அதிகார சபையின் www.caa.lk   இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் சுமார் 500 ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமானது, இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ட்ரோன்கள் அதனை பதிவு செய்தவர்களிடம் தொடர்ந்தும் காணப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் பதிவு செய்யப்படாத ட்ரோன்களை பதிவு செய்தலுமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர், ட்ரோன்களை பறக்க விட பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணக்கெடுப்பிற்கமைய பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,  ட்ரோன்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...