மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு | தினகரன்


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு

அரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள  வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகளை கடுமையாக பாதித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், மருத்துவ கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமை, வைத்தியர்களுக்கான நடவடிக்கை குறிப்பை மாற்றியமைத்தமை, விஞ்ஞான பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்குவதற்கான சட்டவிரோத முயற்சிகள் உள்ளிட்ட உள்ளிட்ட 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

இருப்பினும் மகப்பேறு மருத்துவமனைகள், சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை விசேட சிறுநீரகப் பிரிவு மற்றும் முப்படையினரின் வைத்தியசாலைகள் ஆகியவற்றில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     


Add new comment

Or log in with...