'சைரா நரசிம்ம ரெட்டி' வாழ்க்கை வரலாற்றுப் படம் | தினகரன்


'சைரா நரசிம்ம ரெட்டி' வாழ்க்கை வரலாற்றுப் படம்

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான், `சைரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபக்ட்ஸ் எனப் பிரமாண்டமாக உருவாகிவருகிறது, `சைரா நரசிம்ம ரெட்டி'.

இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஒக்டோபர் 2-ம் திகதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்திற்கு, எதிர்பார்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது.


Add new comment

Or log in with...